கற்றுத்தரும் குரு An article by SRK IYER எந்த ஒரு பாடத்தையோ அல்லது தொழிலையோ அல்லது ஒரு கலையையோ கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அந்த பாடத்தையோ அல்லது தொழிலையோ அல்லது அந்த கலையையோ கற்றுத்தர ஒரு குரு வேண்டும். அந்த குருவை நாம் ஆசான், ஆசிரியர், ஆச்சார்யர் என்று பல பெயர்களில் அழைக்கிறோம். இதில் குரு என்கிற வார்த்தையே மிகவும் சிறந்தது. “கு” என்கிற எழுத்திற்கு அஞ்ஞானம் அல்லது அறிவீனம் என்று பொருளுண்டு. “ரு” என்கிற எழுத்திற்கு அழிப்பவர் என்று பொருள். அதாவது நமது அறியாமையை போக்கி அறிவு எனும் ஒளி அமுதத்தை வழங்குபவரையே சாத்திரங்கள் குரு என்று அழைக்கின்றன. இருப்பினும் ஆசான், ஆசிரியர், என்றே பல சமயங்களில் அறிவை போதிக்கும் குரு அடையாளம் காணப்படுகிறார் என்றே நாம் புரிந்துகொள்ளலாம். குருவிற்கு பல பெயர்களை நமது சாத்திரங்கள் அடையாளப்படுத்தியுள்ளது. அவையாவன: ஸ்ரீநாதர், ஆராத்தியர், ஆசார்யர், சுவாமி, மகேஸ்வரன், தேசிகர், பட்டாரகர், தேவர், பிரபு, சம்யமீ, யோகி, அவதூதர் போன்ற பல பெயர்களில் குருவை வணங்கியிருக்கிறார்கள். அடையாளம் கண்டிருக்கிறார்கள். “குருவில்லாத வித்தை பாழ்” என...
Posts
Showing posts from January, 2019