அஜபா யோகம் By கலாவாணிதாசன் SRK IYER உளவியல் ஆலோசகர் யோகம் என்ற வடமொழி சொல்லுக்கு இணைதல் அல்லது ஒன்று படுதல் என்று பொருள் கொள்ளப்படும். ஒன்றுபடுதல் என்று சொன்னால் ஒரு பொருளையோ அல்லது ஒரு ஒலியையோ நினைத்து அந்த எண்ணத்துடன் இணைதல் என்று நாம் பொருள் கொள்ளலாம். அஜபா என்றால் ஜபமற்றது என்று பொருள். ஜபம் அல்லது தியானம் என்றால் ஒரு பொருளையோ அல்லது ஒரு மந்திரத்திலோ நாம் மிகவும் ஆழ்ந்து அந்த பொருளிலோ அல்லது ஒலியிலோ நம்மை நாமே ஒன்றுபடுத்திக் கொள்ளுதல் ஜபம் எனப்படும். ஜபமில்லாதது என்றால் எப்படி? ஏதேனும் ஒரு பொருளில்தானே மனம் செல்ல முடியும். அப்படி மனம் செல்லும்பொழுதுதானே அது ஜபமாக முடியும். அப்படி இல்லாமல் ஜபமற்றது என்றால் என்ன? ஜபமற்றது என்றால் சதா சர்வ காலமும் ஜபத்திலேயே இருப்பதினால் அது இல்லாதது ஆகிறது என்று நாம் புரிந்து கொள்ளலாம். அதாவது ஜபம் இடைவிடாது நடை பெறுகிறது என்று புரிந்து கொண்டால் அதுவே அஜபை ஆகிறது என்று புரிந்து கொள்லலாம். எனது பூஜ்ய ஸ்ரீ பரமேஷ்டி குருநாதர் அவர்கள் எழுதிய “அஜபா கல்பம்” என்கிற புத்தகத்தின் முன்னுரையில் அஜபா என்றால் என்...
Posts
Showing posts from October, 2021