ஆர்த்ரம் ஜ்வலதி – ஒரு சிந்தனை By கலாவாணிதாசன் SRK IYER உளவியல் ஆலோசகர் ஸ்ரீ தேவி நவாவரண பூஜையில் தத்வ சோதனம் எனும் ஒரு பகுதி உண்டு. அந்த பகுதியின் நிறைவில் “ஆர்த்ரம் ஜ்வலதி” என்கின்ற மந்திரத்தை கூறி பூஜகர் கொடுத்த விசேஷ அர்க்யத்தை ப்ரசாதமாக ஏற்று எடுத்துக்கொள்ளுவர். அந்த “ஆர்த்ரம் ஜ்வலதி” எனும் மந்த்ரம் கூறுவதாவது: “நீரில் ஒளிரும் ஒளி நானே . அந்த ஒளிர் தரும் ஒளியாக ஒளிரும் பிரம்மம் நானே. எவர் நானாக உள்ளாரோ அந்த பிரம்மம் நானே. பிரம்மமாக நானே இருக்கிறேன். நானாக நான் இருக்கிறேன். நான் நானாக இருப்பதால் என்னில் நான் என்னையே ஆஹுதியாக அளிக்கிறேன். மேற்கூறிய வகையிலே இந்த “ஆர்த்ரம் ஜ்வலதி” என்கிற மந்திரத்திற்கு மகான்கள் பொருள் கொண்டிருக்கிறார்கள். அதாவது நான் என்பது இந்த உடலல்ல. மனமுமல்ல என்று சொல்லுகின்ற வேதாந்த கருத்தை இந்த மந்திரம் தெளிவாக கூறுவதாக நாம் பொருள் கொள்ளலாம். இறுதியாக அமைந்துள்ள “ என்னில் நான் என்னையே ஆஹுதியாக அளிக்கிறேன்” என்கின்ற சொற்றொடர் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதுகிறோம். ஏனெனில் மனதில் ஓடும் எண்ணங்களை அப்படியே நிறு...
Posts
Showing posts from October, 2018
- Get link
- X
- Other Apps
நவராத்திரி By கலாவாணிதாசன் SRK IYER புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி சாரதா நவராத்திரி என்று பெயர் பெற்று வெகு விமரிசையாக கொண்டாடப்படும் விழா ஆகும். இந்த நவராத்திரியில் ஸ்ரீ தேவீ மகாத்மியம் என்னும் தேவியின் மகிமைகளை கூறும் புராணத்தை படிப்பது சிலரது மரபு. இந்த ஸ்ரீ தேவீ மகாத்மியத்தை பாராயணம் செய்தால் உன்னதமான பலன்கள் கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. இந்த தேவி மகாத்மியத்தின் சிறப்பே இதன் ஆரம்பம்தான். இந்த தேவி மகாத்மியம் இரவின் மடியில் ஆரம்பிக்கின்றது. சுரதன் என்ற மன்னன் தன இராஜாங்க பிரபுக்களால் வஞ்சிக்கப்பட்டு நாடு துறந்து காட்டில் சஞ்சரிக்கின்றான். அதைப்போலவே சமாதி எனும் பெரும் செல்வந்தனான வணிகனும் தன சுற்றத்தாரால் ஏமாற்றப்பட்டு அந்த அடர்ந்த காட்டில் சஞ்சசரிக்கின்றான். மனதிலே வேதனை. மன இருள் அவர்களை சூழ்ந்துள்ளது. அதனை குறிக்கும் முகமாக இரவிலே துடங்குகின்றது இந்த ஸ்ரீ தேவி மகாத்மியம். அந்த இரவிலும் ஒரு ஒளியாக ஒரு வேத கானம் கேட்கின்றது. ராத்திரி தேவியே உனக்கு வணக்கம் என்று இரவின் தேவியை துதிக்கும் வேத ஒலி அவ...