நவராத்திரி
By
கலாவாணிதாசன்
SRK IYER
புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி சாரதா நவராத்திரி
என்று பெயர் பெற்று வெகு விமரிசையாக கொண்டாடப்படும் விழா ஆகும்.
இந்த நவராத்திரியில் ஸ்ரீ தேவீ மகாத்மியம் என்னும் தேவியின்
மகிமைகளை கூறும் புராணத்தை படிப்பது சிலரது மரபு.
இந்த ஸ்ரீ தேவீ மகாத்மியத்தை பாராயணம் செய்தால் உன்னதமான
பலன்கள் கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.
இந்த தேவி மகாத்மியத்தின் சிறப்பே இதன் ஆரம்பம்தான். இந்த தேவி மகாத்மியம் இரவின் மடியில்
ஆரம்பிக்கின்றது.
சுரதன் என்ற மன்னன் தன இராஜாங்க பிரபுக்களால்
வஞ்சிக்கப்பட்டு நாடு துறந்து காட்டில் சஞ்சரிக்கின்றான். அதைப்போலவே சமாதி எனும் பெரும் செல்வந்தனான
வணிகனும் தன சுற்றத்தாரால் ஏமாற்றப்பட்டு அந்த அடர்ந்த காட்டில்
சஞ்சசரிக்கின்றான்.
மனதிலே வேதனை. மன
இருள் அவர்களை சூழ்ந்துள்ளது. அதனை
குறிக்கும் முகமாக இரவிலே துடங்குகின்றது இந்த ஸ்ரீ தேவி மகாத்மியம்.
அந்த இரவிலும் ஒரு ஒளியாக ஒரு வேத கானம் கேட்கின்றது.
ராத்திரி தேவியே உனக்கு வணக்கம் என்று இரவின் தேவியை
துதிக்கும் வேத ஒலி அவர்களுக்கு கேட்கின்றது.
அந்த ஒலி வந்த திசையை நோக்குகிறார்கள்.
அங்கே ஒரு குடில் தெரிகின்றது.
அதனின்று வெளிச்சம் வருவது தெரிகின்றது.
மிக அருமையான ஒரு தத்துவத்தை இந்த இடம் நமக்கும்
சொல்கின்றது. வாழ்க்கையில் எவ்வளவுதான்
இருள் படர்ந்தாலும் நம்பிக்கையுடன் பார்த்தால் அந்த இருளிலும் ஒரு ஒளி தெரியும்
என்ற ஒப்பற்ற தத்துவத்தை இந்த ஸ்ரீ தேவி மகாத்மியம் நமக்கு தெரிவிக்கின்றது.
வாழ்க்கையில் சங்கடங்களையும் துயரங்களையும் சந்தித்தவர்கள்
துவண்டு விடாமல் ஜகன்மாதாவின் திருவடிகளை நம்பிக்கையுடன் பற்றினால் எந்த இருளிலும்
நமக்கு ஒளி கிடைக்கும். நமது வலி மறையும் என்று ஸ்ரீ தேவி மகாத்மியம்
கூறுகின்றது.
இந்த நவராத்திரியில் தினமும் சிறப்பு வாய்ந்த இந்த ஸ்ரீ
தேவி மகாத்மியத்தை படிப்பது சிலர் மரபு.
நவராத்திரி நாயகியே
நான்மறைகளின் ஈஸ்வரியே
நானிலத்தை காப்பவளே
நல்வாழ்வை தருபவளே
மன இருளை அகற்றி
மன ஒளியை ஏற்றி
மகிழ்ச்சியை நாட்டி
மாந்தரை காப்பவளே
சற் சந்தானம்
சௌபாக்கியம்
சந்தோஷ வாழ்வு
தேக ஆரோக்கியம்
தந்திங்கு எம்மை
காத்து நிற்பவளே
நவராத்திரி நாயகியே
சகல லோக ஈஸ்வரியே
ஞான சரஸ்வதியே
கற்பக விருட்சமே
காத்து எங்களை வாழ்விப்பாய்
கற்பகமே
கலாவாணியே.
Comments
Post a Comment