குரு வணக்கம்
அஞ்ஞான
அந்தகாரத்தை அகற்றிடும் அருளே
மெய்ஞான
ஒளிதீபத்தை ஏற்றிடும் திருவே
அருள்கொண்ட
கண்களால் அருளும் ஒளியே
ஆட்கொண்ட நாயகரே
சரணம் நின் திருப்பாதமே
இன்னலேன்று
அழும்போது அஞ்சேல் என்றபடியே
மின்னலென
சடுதியில் அபயமளிக்கும் அருள்வடிவே
விண்ணுக்கும் மண்ணுக்குமாய்
விளங்கிநின்ற தேவியை
கண்ணுக்கும்
எண்ணுக்கும் காட்டிடும் திருவே
பணிகிறேன் நின்
திருப்பாதம் சரணம் நின் திருப்பாதமே
குருவின் அருளால்
குவலயம் காணலாம்
குருவின் அருளால்
அரும்பொருள் மேவலாம்
குருவின் அருளால்
மறைபொருள் அறியலாம்
குருவின் அருளால்
இறையருள் பெறலாமே.
Comments
Post a Comment